ஆந்திரா கிராமத்தில் பெய்த மீன் மழை போட்டி போட்டு அள்ளி சென்ற மக்கள்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில்  கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி காமா மண்டலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

கொள்ளமுடி, பல்லகிரி ஆகிய கிராமங்களில் விவசா யிகள் நேற்று காலை வழக்கம் போல் தங்கள் வயல்களுக்கு சென்றனர். அப்போது இரவு பெய்த மழையில் வயல் களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் ஏராளமான மீன்கள் உயிருடன் நீந்தியது. நூற்றுக்கணக்கான மீன்கள் தரையிலும் சிதறி கிடந்தது. சுமார் 50 ஏக்கர் பரப்பில் மீன்கள் கிடந்தது.
அதனை விவசாயிகள் போட்டி போட்டு அள்ளினர். உயிருடன் நீந்திய மீன்களை கட்டையால் அடித்து கொன்று பிடித்தனர். மாலை வரை இந்த மீன் வேட்டை நடந்தது. ஒவ்வொரு மீனும் அரைக்கிலோ எடையுடன் காணப்பட்டது.

இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியதாக கிராம மக்கள் கூறினார்கள். ஜராவதம் கிராமத்தில் மழை பெய்தபோது சாலையில் மீன்கள் கொட்டியதாக நேரில் பார்த்த நரசிம்மராவ் தெரிவித்தார்.மீன் மழை பெய்த தகவல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான மக்கள் கொள்ளமுடி கிராமத்துக்கு வந்து வானத்தில் இருந்து கொட்டிய மீன்களை பார்த்து அதிசயித்தனர்.

மீன் மழை பெய்வது அதிசய மான ஒன்றுதான் என்று விசா கப்பட்டினத்தைச் சேர்ந்த சுற்றுசூழல் நிபுணர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஆகாயத்தில் அடர்த்தியான மேகங்கள் ஏற்பட்டு நகரும் போது சுழல் காற்று ஏற்படும். அந்த சூழல் காற்று யானையின் தும்பிக்கை போல கீழே இறங்கும்.
கடல் மற்றும் நீர் நிலை மேல் அந்த சுழல் காற்று ஏற்படும் போது நீரில் உள்ள மீன்கள், தவளைகள் போன்றவைகள் இழுக்கப்பட்டு  மேலே அடித்துச் செல்லும். சுழல் காற்றின் சீற்றம் குறையும் போது அதனால் ஈர்க்கப்பட்ட மீன்கள் தரையில் விழுந்து சிதறுகிறது.

அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளீல் இது போன்ற மீன் மழை அடிக் கடி நிகழ்வது உண்டு. வட மாநிலத்தில் கூட மீன் மழை பெய்து உள்ளது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் மேக சுழல் காற்று ஏற்பட்டு மீன்கள் மேலே அடித்துச் செல்லப்பட்டு மழையாக கொட்டி இருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.


நீங்கள் அசைவப் பிரியரா?
அதுலையும் நண்டுப் பிரியரா?
சற்றுப் படியுங்கள் இதை..!!
நீங்கள் நண்டு வாங்தும் போது (படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்..!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!

ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் துபாயில்.




துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழ் உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும்.

இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என  சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

உலகிலே மிக நீளமான train 3km நீளம் கொண்டது.....!

'தண்ணிகாட்டிய' டி.எஸ்.பி. தங்கவேல் கைது!! செம்மரக் கடத்தல் வழக்கில் திருப்பம்.

 செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள பாலூரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் கடந்த மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல், கடந்த 25-ந் தேதி சின்னபையனை மிரட்டி 7 டன் செம்மரக் கட்டைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

dspமேலும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், டி.எஸ்.பி. தங்கவேலுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கவேலுவை தேடி வந்தனர். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தலைமறைவாகி விட்டார்.அத்துடன் முன் ஜாமீன் பெறவும் முயன்றுவந்தார். அம்முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி. தங்கவேல் நேற்று நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்திருந்தார். இதை அறிந்த காவல்துறையினர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.