இன்று இறுதி முடிவு.நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம்




நிலம் கையகப்படுத்துதல்  அவசரச் சட்டம்  கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக பிறப்பிக்கப்பட்டது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் 6 வாரங்களுக்குள் அதற்கு மாற்றான மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்படாத நிலையில், 6 மாதங்களுக்குள் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட முதல் அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு ஒரு நாள் முன்பாக,  கடந்த மார்ச் மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அடுத்த மாதம் 4-ஆம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.

Dina Udhayam: தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சா...

Dina Udhayam: தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சா...: தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர்  பிரதிப் பைஜால் "இந்திய மறு சீரமைப்பின் முழு கதை"  என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ...

Dina Udhayam: தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .

Dina Udhayam: தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்...

Dina Udhayam: ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் ...

Dina Udhayam: ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் ...: 2ஜி விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise என்ற பெயரில...

Dina Udhayam: சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களி...

Dina Udhayam: சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களி...: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 5 பேரின் பெயர்களும் சுவிச்சர்லாந்து அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் யாஸ் பிர்லா, குர...

தயாநிதி மாறன் மிரட்டியதாக பிரதீப் பைஜால் குற்றச்சாட்டு.



தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர்  பிரதிப் பைஜால் "இந்திய மறு சீரமைப்பின் முழு கதை"  என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  2 ஜி வழக்கில் இணைந்து போகுமாறு கூறியதுடன், வழக்கில் ஒத்துழைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி மாறன், ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருத்ததையும், அதனை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொலைத் தொடர்புத் துறையின் அனைத்து முடிவுகளையும் தாமே எடுப்பேன் என்று கூறிய தயாநிதி மாறன்,  உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தம்மை எச்சரித்தாக பிரதீப் பைஜால் கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட ஒவ்வொரு வழக்கிலும், சி.பி.ஐ தரப்பால் தாம் எச்சரிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஒப்புதலுடனேயே ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்புத் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த புத்தகத்தில், பிரதீப் பைஜால் கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவின் இந்திய மைதானங்கள் அறிவிப்பு .




தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி  டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒரு நாள் போட்டிக்கு சென்னை, கான்பூர், ராஜ்கோட், மும்பை மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

20 ஓவர் தொடர் கொல்கத்தா, மொகாலி, தர்மசாலாவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராய் முன்னாள் தலைவர்.2ஜி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் மிரட்டினார்.






2ஜி விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, The Complete Story of Indian Reforms: 2G, Power and Private Enterprise என்ற பெயரில் பிரதீப் பைஜால் புத்தமாக எழுதியுள்ளார். அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், மத்திய அரசுடன் உரிய ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மன்மோகன் சிங் தம்மை மிரட்டியதாக பைஜால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திசை திருப்ப, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார். 

2ஜி விவகாரத்தில், பிரச்னைகள் எப்படி தலைதூக்கின என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அத்தியாயத்தில், 2004ம் ஆண்டு, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதாக பைஜால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரத்தில், தனது உத்தரவுகளை செயல்படுத்தத் தவறினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தயாநிதி மாறனும், தனக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக பைஜால் குற்றம்சாட்டியுள்ளார். டாடா ஸ்கை Tata Sky நிறுவனத்தை சன் டிவியுடன் இணைக்க வேண்டும் என டாடா நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ரத்தன் டாடாவை 2004ம் ஆண்டு தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் பைஜால் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள 5 இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.







மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 5 பேரின் பெயர்களும் சுவிச்சர்லாந்து அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் யாஸ் பிர்லா, குர்ஜிங்சிங் கோசர், ரிதிகா சர்மா ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதே போன்று லதா சாவ்னி சங்கீதா சாவ்னி ஆகிய இரு பெண்களின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் வரும் காலங்களில் இன்னும் பலரது பெயர்கள் வெளி வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அழித்த தகவல்களை திரும்ப பெற முடியும்.அண்டுராய்ட் போனில்.


Image result for அண்டுராய்ட்

இப்போது பலரும் தனது பழைய போனை விற்பனை செய்து புதிய பதிவு கொண்ட போன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் . பழைய போனை விற்பனை செய்யும் முன் அதில் உள்ள அனைத்து தகவல்களை அழித்து விட்டு விற்பனை செய்கின்றனர் பயனாளர்கள் .

அண்டுராய்ட் போனில் இவ்வாறு அழித்த தகவல்களை திரும்ப பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் . இதனால் விற்பனை செய்யப்பபட்ட பழைய போனில் இருந்து தகவல்கள் திருட முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அழிக்கப்பட்ட பாதுகாப்பு தகவல்களை திரும்ப பெற முடியும் என்று  ஆய்வாளர்கள் ஆதாரத்துடன்  நிருபித்துகாட்டியுள்ளனர்.

கிசான் தொலைக்காட்சி: இன்று தொடங்கி வைக்கிறார் மோடி.





வேளாண் தொழில் நலிவடைந்து வருவதோடு, விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. இந்த நிலையில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கும் வேளாண் தொலைக்காட்சியில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.  தொலைக்காட்சியின் வடிவமைப்பிற்காக 50க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற விவசாய வல்லுநர்களும், தொழில்நுட்ப ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொலைக்காட்சி விவசாயத்துறையை மேலும் வலுப்படுத்தவும், விவசாயத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் உதவும் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டின் விவசாய சூழலை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயத்திற்கான பிரத்யேக தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு செய்த பின்னர் இதுபோன்ற தொலைக்காட்சியை தொடங்குவது அரசியல் நோக்கம் கொண்டது என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து பிரதமர் மோடி விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில்  ”மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இருப்பதை வெளிப்படுத்தியதோடு,  பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு நிதி வழங்கியும் தனது ஆதரவை தெரிவித்துவருகிறார்.  டெல்லி மதுராவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியிலும், விவசாயிகளின் நண்பனாக பாஜக அரசு உள்ளது என்பதை பிரதமர் மோடி கூறினார்.

விவசாயிகளுக்கான இந்த 24 மணி நேர தொலைக்காட்சியில் விவசாயம் சார்ந்த சிறப்பு செய்தி தொகுப்புகள், விவாதங்கள் மற்றும் உலக நாடுகளின் விவசாயத்துறை குறித்த சிறப்பு தகவல்கள் இடம் பெறும். 30 நிமிட சிறப்பு வேளாண் செய்திகள், விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.  கிராமப்புற மக்கள் இந்த தொலைக்காட்சியை எளிதாக பார்க்கும் வகையில் அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் கட்டாயமாக இந்த தொலைக்காட்சியை ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  பிரதமர் மோடியினால் தொடங்கப்படும் கிசான் தொலைக்காட்சி, அரசியல் தலையீடுகளையும் மீறி விவசாயத்துறையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இன்று முதல் இறுதி வாதம் தொடக்கம்.2ஜி வழக்கு




இன்று நடைபெறும் வாதங்களின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வாதங்களை முன்வைக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு ஷேவாக், ஹர்பஜனுக்கு வாய்ப்பா? வங்காளதேச தொடர்.

வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. ஷேவாக், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இன்று தேர்வு
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் ஜூன் 10–ந் தேதி முதல் 14–ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் மிர்புரில் ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வங்காளதேச தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா
கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலிய பயணத்தின் போது கேப்டன் டோனி திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலி நியமிக்கப்பட்டார். உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து விளையாடியதால் டோனி, விராட்கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படமாட்டாது என்றும் ஒருநாள் போட்டி தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. டோனிக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால் அவர் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக இருப்பார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் லோகேஷ் ராகுல், ரஹானே, தவால் குல்கர்னி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஷேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் வங்காளதேச தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பிரிவு உபசார போட்டியாக இந்த தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 2011–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஜொலித்த இவர்கள் அதன் பிறகு அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்கள். 4 பேரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். ஷேவாக், யுவராஜ்சிங் சொதப்பினாலும், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியில் விரிசல் டெல்லி விமானம் அவசரமாக தரை இறங்கியது 169 பயணிகள் உயிர் தப்பினர்.



            ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.ஐ–873 என்ற விமானம் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டது. இதில் 169 பயணிகள் பயணம் செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராகோ பகுதி அருகே விமானம் பறந்து கொண்டிந்த போது விமானத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். உடனடியாக அவர் லக்னோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து விமானம் அவசரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் 169 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேர்வில் அதிகம் மார்க் போடுவதாக கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்.



சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் என்ற பகுதியில் மாதவ் நாக் (வயது 52)அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பள்ளி மாணவியை தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி கடந்த மூன்று வருடங்களாக பாலியல் பலத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்து விட்டார். மகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்ட மாணவியின் பெற்றோர் இது குறித்து
மாணவியிடம் விசாரித்தனர். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதவ் நாக் கடந்த 3 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாக்டி போலீசில்புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுகொண்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தமட்ரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிஹாவாவுக்கு சென்றுள்ளனர்.

நயன்தாராவுக்கு திடீர் திருமணம். கிறிஸ்தவ கோவிலில்.

நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். கிறிஸ்தவ கோவிலில் நயன்தாராவுக்கு திடீர் திருமணம்?

ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் நயன்தராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். 

பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். கோவிலில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. இருவரும் பிரிந்தனர். 

காதல் தோல்விகளால் விரக்தியில் இருந்த நயன்தாரா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வந்தார்.

விக்னேஷ் சிவன் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘போடா போடி’ படத்தை இயக்கியவர். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

கொச்சியில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த திருமணம் நடந்துள்ளது. இருவர் தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும். திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு ஆடம்பர சொகுசு கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதுரகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட2000 பேர் உயிருடன் மீட்பு 10 பேரில் 4 பேர் சடலம் மீட்பு.


இவர்களில் பலர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்தனர். மதியம் சுமார் 1 மணி அளவில் திடீரென்று அங்கு பலத்த மழை பெய்தது.

இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.





இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான ”பிஎஸ்என்எல்” (BSNL),400 மேலாண்மை பயிற்சி (Management Trainee) பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தவுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு மற்றும் கல்வி தகுதி குறித்த தகவல்களை www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

தொழில்நுட்பத்துறையில் ஆர்வமிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு, SAIL, GAIL, BHEl போன்ற அரசு தொழிநுட்ப நிறுவனங்கள், தகுதி தேர்வின் மூலம் அந்நிறுவனங்களில் சேர வாய்ப்பளித்து வருகின்றன. இத்தேர்வுகளை பற்றிய தகவல்களை, மாணவர்கள் அந்நிறுவனங்களின் இணையத்தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்

மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தன. 3,298 மையங்களில் தேர்வுகள் நடந்தன. 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள், 50 ஆயிரத்து 429 தனித் தேர்வர்கள், சிறைவாசிகள் 240 பேர் உட்பட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் தேர்வை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் 
www.tnresults.nic.in 
 www.dge1.tn.nic.in 
 www.dge2.tn.nic.in 
 www.dge3.tn.nic.in
www.kalvisolai.com

மலிவு விலை ”க்ரோம் புக்” இந்தியாவில் அறிமுகம்



கூகுள் நிறுவனம் ஸோலோ (Xolo ) மற்றும் நெக்ஸியான் (Nexian) என்னும் இரண்டு மலிவு விலை க்ரோம்புக் (Chromebook) லேப்டாப்புகளை 12,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியின் புதுமை பெண் சிறந்தமுன் மாதிரி விருதினை பெற்றார்.


கத்ரீனா முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் .



சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய நடிகைகள் கலந்துகொள்வது அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட் போன்களில் நோக்கியாவின் 'ஸ்நேக் கேம்'




நோக்கியாவின் ஸ்நேக்  கேம், நவீன ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்றவாறு மறுவடிவமைக்கப்பட்டு, "ஸ்நேக் ரிவைண்ட்" (Snake Rewind) எனும் பெயரில், மே 14-ஆம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேண்டி கிரஷ், டெம்பில் ரன், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற ஸ்மார்ட் போன் விளையாட்டுகள் தலைக்காட்டுவதற்கு முன்னர், பலரின் அபிமான விளையாட்டாக திகழ்ந்தது நோக்கியாவின் ’ஸ்நேக்  கேம்’ ஆகும்.

இந்த ’ஸ்நேக்  கேம்’, ’தனேலி அர்மண்டோ’ என்பவரால் 1997 ஆம் ஆண்டு நோக்கியா மொபைல் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களின் வருகையால், நோக்கியாவின் பழைய மாடல் மொபைல் போன்கள் உபயோகிப்போரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. அதனுடன் ’ஸ்நேக்  கேம்’ விளையாடுவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

தற்போது அர்மண்டோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், ஃபினிஷ் கேம் ஸ்டுடியோ - ருமிலஸ் டிசைன் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்மார்ட் போன்களுக்கான ஸ்நேக் கேமை, ஸ்நேக் ரிவைண்ட் என்னும் பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் iOS என அனைத்து வகையான ஸ்மார்ட் போன் பயனர்களும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
 
’ஸ்நேக் ரிவைண்ட்’- புதிய கிராஃபிக்ஸ், பல்வேறு விளையாட்டு அம்சங்கள் மற்றும் வேறுபட்ட 10 லெவல்களுடன் வந்துள்ளதால் ’ஸ்நேக் கேம்’ பிரியர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த சமூக வலைத்தளமாக மகுடம் சூடிய(You tube)



சமூக வலைத்தளங்களின் சமீபத்திய போக்குகளை பற்றிய ஆய்வுகளை நடத்தும் ’GWI சமூக அறிக்கை’ நிறுவனம்,

கறுப்புப் பணம் குறித்த தகவல்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.



வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை செலுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது பாஜக. மத்தியில் ஆட்சியை பிடித்ததும் கறுப்பு பணத்தை மீட்பதில் பாஜக வேகம் காட்டவில்லை என்கிற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன் வைக்கின்றன. இந்நிலையில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்போருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த புதன் கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது. 

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய திருப்பமாக இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் ஜோகன் சினெய்தர் அம்மான் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை டெல்லியில் நேற்று சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் குறித்த விபரங்களை திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதில் உள்ள சட்டச் சிக்கல்களை சுட்டிக்காட்டினார். எனினும் இதனை சரிசெய்யும் வகையில் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். 

கறுப்பு பணம் வைத்திருப்போர் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துவதை சுவிட்சர்லாந்து அரசு துரிதப்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் பெரும்பாலான தொகை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் ஜோகன் சினெய்தர் அம்மானின் இந்திய வருகை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

IPL புள்ளி அட்டவணை 2015

POSTEAMSMWLN/RPTSNRR
1சென்னை சூப்பர் கிங்ஸ்13850160.646
2கொல்கத்தா நைட் ரைடர்ஸ்12741150.372
3ராஜஸ்தான் ராயல்ஸ்13652140.027
4ஐதராபாத் சன்ரைசர்ஸ்1275014-0.017
5பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்12651131.036
6மும்பை இந்தியன்ஸ்1266012-0.302
7டெல்லி டேர் டெவில்ஸ்1358010-0.049
8கிங்ஸ் லெவன் பஞ்சாப்1331006-1.425

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் “கூகுள் ஃபிட்”



’கூகுள் ஃபிட்’ செயலியின் (Google Fit App) மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கின்றோம் என்பதையும் நம் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

எறும்புக் கடித்து சென்னையில் 12வயது சிறுவன் பலி - அதிர்ச்சி தகவல்.

12 வயது நிரம்பிய சுதாகர் என்ற சிறுவன் குளித்து விட்டு துவட்டும்போது எறும்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. 

மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்தார்.






தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது. சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, விஜயகாந்திடம், தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை, ஸ்டாலின் வழங்கினார்.

ஏர்டல் நிறுவனம் சென்னையில் 4G சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.




ஏர்டல் 4G சேவை சென்னையில் நேற்று துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள ஏர்டல் பயனர்கள் தங்கள் தற்பொதைய 3G ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு சேவையின் வாயிலாக 4G பயன்படுத்தி கொள்ளலாம் என ஏர்டல் நிறுவனம் அறுவித்துள்ளது. அதாவது, தங்கள் மொபைலில் ஏர்டல் 3G பயன்படுத்தி கொண்டிருப்பவர்கள், 4G வேகத்தில் இண்டெர்னெட் சேவையை பெறலாம்.

மேலும் சென்னையில் 4G மொபைல் பயன்படுத்துபவர்கள், அருகில் உள்ள ஏர்டல் ரீடெயில் கடைகளை தொடர்புக் கொண்டு 4G சிம் கார்ட்டை -ஐ பெற்றுக் கொள்ளலாம். 4G மொபைல் மற்றும் சிம் பயன்படுத்துபவர்கள், 3G ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் செய்து 4G சேவை பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு,கொல்கத்தா, புனே உள்ளிட்ட 19 நகரங்களில் 4ஜி சேவையை ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


2400 ஆந்திர கிராமங்களை தத்தெடுப்பு. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள்.

              

       ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராம மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், மாநிலத்தை முழுமையாக வளர்ச்சி பெற செய்யவும், ஆந்திர அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், ”ஸ்மார்ட் வில்லேஜ் - ஸ்மார்ட் வார்டு” திட்டம் .

              இவ்வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சரின் மகனுமான நரா லோகேஷ், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து இத்திட்டத்தை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத்திட்டதிற்கு இந்திய அமெரிக்கர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல இந்திய அமெரிக்கர்கள் ஆந்திராவில் உள்ள 2417-க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுக்கவும், ஆந்திராவில் முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.


        மேலும் தெலுங்கு தேச தலைவர் லோகேஷ், அமேரிக்க அதிபர் ஒபாமா, மற்றும் பிரபல தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து ஆந்திராவில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


welcome

welcome