'தண்ணிகாட்டிய' டி.எஸ்.பி. தங்கவேல் கைது!! செம்மரக் கடத்தல் வழக்கில் திருப்பம்.

 செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள பாலூரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் கடந்த மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல், கடந்த 25-ந் தேதி சின்னபையனை மிரட்டி 7 டன் செம்மரக் கட்டைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

dspமேலும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், டி.எஸ்.பி. தங்கவேலுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கவேலுவை தேடி வந்தனர். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தலைமறைவாகி விட்டார்.அத்துடன் முன் ஜாமீன் பெறவும் முயன்றுவந்தார். அம்முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி. தங்கவேல் நேற்று நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்திருந்தார். இதை அறிந்த காவல்துறையினர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment