கூகுள் அலுவலகத்தில் கமல்ஹாசன்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றச் சென்ற கமல்ஹாசன் தொடர்ந்து அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கும் கமல்ஹாசன்சென்றுள்ளார்.
அங்குள்ள நிர்வாகிகளுடனும், பணியாளர்களுடனும் விவாதம் மற்றும் உரையாடலில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். கமலுடன் கூகுள் பணியாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.
அது பற்றிய புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூகுள் அலுவலகப் பயணம் குறித்தும் கமல் கருத்து தெரிவித்துள்ளார். “கூகுளையே கூகுள் செய்து, சில கூகுளர்களுடனும் நிர்வகித்த போது,” என மகிழ்ச்சியுடன் கமல் பதிவிட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் டிவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ‘உலகநாயகன் டியூப்‘ என்ற யு டியூப் வீடியோ தளம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
தொழில்நுட்பம் மாற மாற அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர்கமல்ஹாசன். ஆவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமாவில் இருந்து தற்போதைய டிவிட்டர் வரை தன் தனித்துவத்தில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment