
சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய நடிகைகள் கலந்துகொள்வது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராய், சோனம்கபூரை தொடர்ந்து இந்தாண்டுக்கான 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கத்ரீனா கைஃப் கலந்துக்கொண்டார். அங்கு எடுத்த சில புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
கேன்ஸ் திரைப்பட விழாவில் காத்ரினா கைப் கலந்துக்கொள்வது முதன்முறையாக இருந்தாலும், அவர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்து நடந்துகொண்டதாக விழாவில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர். பல ஹாலிவுட் பிரபலங்களுடன் அவர் புகைபடங்களும் எடுத்துக்கொண்டார்.
ஆஸ்கர் விருது வென்ற நடிகை ஜூலியன் மூருடன் அவர் எடுத்த புகைப்படம் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.கேன்ஸ் திரைப்பட விழாவில் பல உலக பிரபலங்களுடன் இனைந்து கலந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் கத்ரீனா.
No comments:
Post a Comment