மலிவு விலை ”க்ரோம் புக்” இந்தியாவில் அறிமுகம்



கூகுள் நிறுவனம் ஸோலோ (Xolo ) மற்றும் நெக்ஸியான் (Nexian) என்னும் இரண்டு மலிவு விலை க்ரோம்புக் (Chromebook) லேப்டாப்புகளை 12,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


பள்ளிகளை இலக்காக வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த க்ரோம்புக்ஸ், அமேசான் மற்றும் ஸ்நேப் டீல் இணைய கடைகள் மூலம் விற்கப்பட்டு வருகின்றன.

இதை குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில் “அமெரிக்க பள்ளிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதனமான க்ரோம்புக்ஸ் தற்போது இந்திய பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளை இலக்காக வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த க்ரோம் புக்ஸ், மாணவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும், தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ASUS க்ரோம்புக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.

No comments:

Post a Comment