
நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக பிறப்பிக்கப்பட்டது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் 6 வாரங்களுக்குள் அதற்கு மாற்றான மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்படாத நிலையில், 6 மாதங்களுக்குள் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட முதல் அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு ஒரு நாள் முன்பாக, கடந்த மார்ச் மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அடுத்த மாதம் 4-ஆம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment