உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் “கூகுள் ஃபிட்”



’கூகுள் ஃபிட்’ செயலியின் (Google Fit App) மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கின்றோம் என்பதையும் நம் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


ஆப்பிளின் ‘ஹெல்த் கிட்’ (Health Kit) செயலிக்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலியான ‘கூகுள் ஃபிட்’  என்னும் செயலியை சென்ற வருடம் அறிமுகப்படுத்தியது .

தங்கள் உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, மருத்துவ அறிக்கைகள் மற்றும் குறிப்புகளையும் பராமரித்து கொள்ளலாம். ஆனால் இந்த செயலியின் மூலம், பயனர்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்துள்ளனர் என்றும் அவர்கள் உடலின் களோரிகளின் அளவையும் தெரிந்து கொள்ள முடியாது.

தற்போது கூகுள் நிறுவனம் ’கூகுள் ஃபிட்’ செயலியை மேம்படுத்தி, பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம், இனி ’கூகுள் ஃபிட்’ பயன்படுத்துபவர்கள், தங்கள் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளது என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள நினைப்பவர்கள், இந்த வகை செயலிகளை (Apps) தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உடல் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பாலினம், எடை மற்றும் உயரம் குறித்த தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.

இந்த வகையான செயலிகள், நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கின்றோம் ,உடலுக்கு தேவையான உடற்பயிற்சி நேரம், கலோரி அளவு உள்ளிட்டவற்றை துள்ளியமாக கணக்கிட்டு காட்டுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment