
இன்று நடைபெறும் வாதங்களின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வாதங்களை முன்வைக்க உள்ளார்.
2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 தனிநபர்களும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லஸ் நிறுவனங்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை 2011 நவம்பர் முதல் நீதிபதி ஒ.பி.சைனி முன்னிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், 153 அரசு தரப்பு சாட்சியங்களும், 29 குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து, இன்று இறுதி வாதம் தொடங்க உள்ளது.
No comments:
Post a Comment