12 வயது நிரம்பிய சுதாகர் என்ற சிறுவன் குளித்து விட்டு துவட்டும்போது எறும்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.
ராயப்பேட்டையில் உள்ள சாலையோர நடைபாதையில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
படிக்க உகந்த சூழல் இல்லாத காரணத்தால் தனது மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்ததாக கூறுகின்றனர் சுதாகரின் பெற்றோர். இந்த மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எறும்பு கடித்த கையோடு சுதாகர் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு சக நண்பர்களுடன் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.
அப்போது கூட நன்றாக தான் இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சுதாகருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சாந்தியை சந்தித்தோம்.
அப்போது, எறும்பு கடித்ததால் அனஃபைலாக்சிஸ் ஷாக் ( Anaphylaxis shock) என்ற நிலைக்கு சிறுவன் தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், எறும்பு கடித்து மனிதன் இறந்ததை இதுவரை தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார்.
அந்த சிறுவனை பையர் ஏன்ட் என்று கூறப்படும் ஒரு வகையான அரிய வகை செவ்வெறும்பு கடித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த வகையான அரிய எறும்பு அங்கே எப்படி வந்தது என்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் யாரிடமும் இல்லை.
மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் விஷப்பூச்சி கடிக்கான என்டமோலஜி என்று சொல்லக்கூடிய சிறப்பு சிகிச்சை பிரிவும் இல்லை..
சென்னையில் எறும்பு கடித்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விஷக்கடிகளுக்கு உரிய சிகிச்சை வசதிகளையும் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

No comments:
Post a Comment